குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கி அருந்ததியின மக்கள் அவதி: வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் தொகுதி, பூண்டி ஒன்றியம், எல்லப்ப நாயுடு பேட்டை ஊராட்சி, புதூர் கிராமம் அருந்ததியினர் வசிக்கும் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர். இதையறிந்த திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், அப்பகுதிக்கு விரைந்து சென்று வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பொறியாளருடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மழை நீரை வெளியேற்றவும் சாலை வசதியை மேம்படுத்தவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அப்போது ஒன்றிய திமுக செயலாளர் டி.கிருஷ்டி, ஐ.ஏ.மகிமைதாஸ்,  தா.மோதிலால், ஊராட்சி செயலாளர் கே.ஆர்.பாபு, நாகேஷ், முருகன் உள்பட பலர் இருந்தனர்.

Related Stories: