×

சாலையில் சாய்ந்த மரம்

சென்னை: அசோக் நகர் 100 அடி சாலையில் தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனை முன்பு சாலையோரம் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் இயந்திரம் மூலம் நேற்று முன்தினம் இரவு பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, பள்ளத்தின் அருகே நின்ற பழமை வாய்ந்த மரம் ஒன்று திடீரென நேற்று வேரோடு சாய்ந்து நூறடி சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் 100 அடி சாலை வழியாக கோயம்பேடு செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Tags : road , Leaning tree on the road
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...