×

குன்னூரில் பூத்து குலுங்கும் சேவல் கொண்டை மலர்கள்: சுற்றுலா பயணிகள் ரசிப்பு

குன்னூர்: குன்னூரில் சேவல் கொண்டை மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இதை, சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து வருகிறார்கள். குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் மலைகளுக்கு இடையே பூத்துக் குலுங்கும் பல வண்ண மலர்கள் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. இதில் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையிலான வழியில், தேயிலை தோட்டங்களுக்கு இடையில் ‘ஸ்பேத்தோடியா’ என அழைக்கப்படும் சேவல் கொண்டை மலர்கள் தற்போது பூத்துக் குலுங்குகின்றன. இது சாலையில் பயணிப்போரின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. மேலும், பசுமையான தேயிலை தோட்டங்களுக்கு இடையே சிவப்பு நிறத்தில் பூத்துள்ளது.

இந்த மலர்கள் டிசம்பர்மாதம் முதல் பிப்ரவரி வரையிலும் ஆகஸட் மாதம் முதல் அக்டோபர் வரையிலும் பூத்துக் குலுங்கும். சிவப்பு நிறத்தில் கொத்து கொத்தாய் மலர்ந்துள்ள இந்த மலர்களால் குன்னூர் மலைப்பாதை சிவப்பு கம்பளம் விரித்தது போன்று காட்சியளிக்கிறது. மேலும் ஐரோப்பிய கண்டத்தை பூர்வீகமாக கொண்ட இவ்வகை பூக்கள் ஆங்கிலேயர் காலத்தில், குன்னூரில் அதிகளவில் நடவு செய்யப்பட்டுள்ளது. இவ்வகை மரங்கள் மலேரியாவை கட்டுப்படுத்தும் குணம் கொண்டது என்பதால், இவ்வகை மரங்கள் தற்போது பாதுகாக்கப்பட்டு வருகிறது.



Tags : Coonoor , Rooster rooster flowers blooming in Coonoor: Tourists
× RELATED தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்...