×

ரூ16 கோடியில் தொடங்கப்பட்ட செண்பகத்தோப்பு அணை சீரமைப்பு பணிகள் 90 சதவீதம் நிறைவு: ஆய்வு செய்த எம்எல்ஏ தகவல்

கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் அடுத்த படவேடு அருகே உள்ள செண்பகத்தோப்பு அணையில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், `செண்பகத்தோப்பு அணையில் உள்ள ரேடியல் ஷெல்டர்கள் ₹16 கோடியில் சீரமைக்கப்பட்டு வருகின்றன. 90 சதவீதம் வேலைகள் முடிந்து விட்டது. மீதி வேலைகளை விரைவில் முடித்து, மழை காலத்திற்கு முன்பு பயன்பாட்டுக்கு வரும். மேலும், அருகில் உள்ள சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, பொழுது போக்கு பூங்கா, படகு சவாரி, பயணியர் தங்கும் விடுதி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு சுற்றுலா தலமாக மாற்றப்படும்.

இதனால், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பெருகும் என்றார். அப்போது, உதவி பொறியாளர் சிவக்குமார், படவேடு ஊராட்சி தலைவர் சீனிவாசன் மற்றும் பலர் உடனிருந்தனர். மலைவாழ் மக்களுக்கு கடனுதவி: ஜமுனாமரத்தூர் ஒன்றியம், நம்மியம்பட்டு மலைவாழ் மக்களுக்கு கூட்டுறவு சங்கம் சார்பில், கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சங்க தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் ஜீவா மூர்த்தி முன்னிலை வகித்தார். சங்க செயலாளர் லதா வரவேற்றார். எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம், 175 பேருக்கு தனிநபர் கடனாக ரூ75 லட்சம், 24 நபர்கள் கொண்ட 2 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ5 லட்சம் கடனுதவி வழங்கினார்.

இதில் பிடிஓ சக்திவேல், ஒன்றியக்குழு துணைத்தலைவர் மகேஸ்வரி செல்வம், ஒன்றிய அதிமுக செயலாளர் வெள்ளையன், மாவட்ட கவுன்சிலர் செல்லன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : completion ,Shenbagathoppu Dam , 90 per cent completion of Shenbagathoppu Dam rehabilitation work started at a cost of Rs 16 crore: MLA
× RELATED பாலக்காட்டில் எம்பி தொகுதி நிதி ரூ.2.26...