அதிர்ச்சியில் பாலிவுட் ரசிகர்கள்: பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன் உள்ளிட்ட 4 முக்கிய நடிகைகளுக்கு போதைப் பொருள் தடுப்பு போலீசார் சம்மன்.!!!

மும்பை: பிரபல இந்தி இளம் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்த் சிங் மரணத்தில் மர்மம் இருப்பதாக கருதி, சி.பி.ஐ. மற்றும்  அமலாக்கத்துறை விசாரணை நடத்தியபோது, போதைப்பொருள் கும்பலுடன் சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்திக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. நடிகை ரியா போதைப்பொருள் பயன்படுத்தியதுடன், சுஷாந்த்  சிங்கிற்காகவும் போதைப்பொருள் வாங்கியதும் தெரியவந்தது.

இதையடுத்து, நடிகை ரியா, அவரது தம்பி சோவிக், சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர், வேலைக்காரர் மற்றும் போதைப்பொருள் கும்பலை சேர்ந்தவர்கள் என 12-க்கும் மேற்பட்டவர்களை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது  செய்துள்ளனர். மேலும், பல பிரபலங்களும் போதைப்பொருட்கள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே, நேற்று முன்தினம் சுஷாந்த் சிங்கின் திறன் மேலாளர் ஜெயா ஷாவிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை  நடத்தினர். அப்போது அவர் போதைப்பொருள் பயன்படுத்தும் மேலும் சில சினிமா பிரபலங்கள் குறித்து திடுக்கிடும் தகவலை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கர்நாடக மண்ணின் மகளும், இந்தி திரைப்பட நடிகையுமான தீபிகா படுகோன், சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர் மற்றும் ரகுல்பிரீத் சிங் உள்ளிட்ட முக்கிய நடிகைகளுக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் இன்று சம்மன்  அனுப்பியுள்ளனர். 3 நாட்களுக்குள் ஆஜராக வேண்டும் என  4 நடிகைகளுக்கு போதைப் பொருள் தடுப்புப்பிரிவு உத்தரவிட்டுள்ளது. போதை பொருள் விவகாரத்தில் தினம் தினம் நடிகைகள் பெயர் இடம்பெறுவது பாலிவுட் திரையுலகில் பரபரப்பை  ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories:

>