2021-ல் மீண்டும் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டும்...ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சிறப்பு பூஜை.!!!

ஸ்ரீவில்லிபுத்தூர்: முதல்வர் பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டும் என ஆண்டாள் கோவிலில்  சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி தலைமையிலான அதிமுக  ஆட்சி மீண்டும் 2021-ம் ஆண்டு மீண்டும் தொடர வேண்டும் என வேண்டி கோவை  அதிமுக இளைஞர் பாசறை துணைச் செயலாளர் விஷ்ணு பிரபு ஸ்ரீவில்லிபுத்தூர்  ஆண்டாள் கோவிலில் சிறப்பு பூஜை செய்தார்.

இதற்காக, கோவை மாவட்டத்தில்  இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே  உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் வந்து இறங்கினார். அங்கிருந்து கார் மூலம்  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சென்று கோயிலில் மறைந்த முதல்வர்  ஜெயலலிதா திருவுருவப்படத்தை வைத்து சிறப்பு பூஜை மற்றும் சிவ சங்க  ஹோமம் நடத்தினார்.

யாகம் தொடர்பாக பேசிய விஷ்ணு பிரபு, 2021-ம் ஆண்டு நடைபெறவுள்ள  சட்டமன்ற தேர்தலில் அதிமுக மீண்டும் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில்  வெற்றி பெற்று 3-வது முறையாக மீண்டும் புரட்சி தலைவி அம்மா அவர்களின்  ஆட்சி தொடர வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜை  மற்றும் யாகம் நடத்தப்படுகிறது.

2011-ல் அதிமுக ஆட்சி எப்படி அமைந்ததோ, மீண்டும் 2016-ல் அதிமுக ஆட்சி எப்படி தொடர்கிறதோ அதனைபோன்று மீண்டும் 2021-ம் ஆண்டும் அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்று சிறப்பு பூஜை நடைபெறுகிறது என்றார்.

Related Stories:

>