ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் காமராஜர் பெயர் பொறித்த கல்வெட்டு அகற்றம்: என்.ஆர்.தனபாலன் கண்டனம்

சென்னை,: பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அறிக்கை: தமிழக முதல்வராக இருந்த பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில், சென்னை பாரிமுனையில் இருந்து தலைமை செயலகம் செல்லும் வழியில், ரிசர்வ் வங்கி எதிரே கடந்த 1963-ம் ஆண்டில் ரயில்வே சுரங்கப்பாதை திறக்கப்பட்டது. இந்த சுரங்கப்பாதையில் கடந்த ஓராண்டாக புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. இதை சமீபத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே நேரம், அங்கு காமராஜர் பெயர் பொறித்த கல்வெட்டை அகற்றி, புதிதாக அமைச்சர் ஜெயக்குமார் பெயர் பொறித்த கல்வெட்டு வைத்திருப்பது கண்டனத்துக்கு உரியது.

Related Stories:

>