×

வார்த்தையில் சொல்லக்கூடியதா அப்பாவின் பாசம் : மூணாறு நிலச்சரிவில் பலியான தனது மகனின் உடலை 40 நாட்களாக தேடும் தந்தை

திருவனந்தபுரம் : ஆகஸ்ட் 6-ம் தேதி மூணாறு பெட்டிமுடியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 66 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், சண்முகநாதனின் 22 வயது மகன் தினேஷ்குமார் உட்பட நான்கு பேரின் உடல் இன்னும் கிடைக்கவில்லை.மூணாறு நிலச்சரிவில் பலியான தனது இளைய மகன் நிதீஷ்குமாரின் உடல் மீட்கப்பட்ட நிலையில், சண்முகநாதன் அவர்களால் இன்னும் தனது மூத்த மகன் தினேஷ்குமாரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் சண்முகநாதன் தினமும் காலையில் நிலச்சரிவு நடந்த பெட்டிமுடிக்குச் செல்லத் தொடங்கினார்,

அங்கு அவர் தனது மகனின் உடலை மாலை வரை தேடுகிறார். கடந்த 40 நாட்களுக்கும் மேலாக இதுதான் அவரது அன்றாட வழக்கமாக உள்ளது. ஜனவரி 2021 வரை என் மகனைத் தேடுவேன். ஒரு குடும்ப உறுப்பினர் இறந்த 41 வது நாளில் வழக்கமாக கடைபிடிக்கப்படும் சடங்குகளை நான் நடத்தவில்லை. என் மகனைக் கண்டுபிடிக்காமல் நான் எப்படி சடங்கை நடத்த முடியும்? அவரது உடலை மீட்காமல் என்னால் தூங்க முடியாது " என்று சண்முகநாதன் கூறுகிறார்.

தேவிகுளம் துணை கலெக்டர் எஸ்.பிரேம்கிருஷ்ணன் கூறுகையில்,இறந்தவர்களின் உடலை தேடுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது.சண்முகநாதனின் வேண்டுகோளின்படி மாவட்ட நிர்வாகம் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது, ஆனால் எங்களால் இதுவரை உடலை மீட்டெடுக்க முடியவில்லை,என்று கூறினார்.

Tags : landslides , Shastri, Bhavan, struggle...
× RELATED மேகவெடிப்பால் நிலச்சரிவு: இமாச்சல் பலி 60 ஆக உயர்வு