×

பாஜ தலைவர் முருகன் வீட்டின் முன்பு கட்சி கொடியை தூக்கிலிடும் போராட்டம் : பெண் கைது

அண்ணாநகர்:கோயம்பேட்டில் பாஜ தலைவர் முருகன் வீட்டின் முன்பு, கட்சி கொடியை தூக்கிலிடும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.சென்னை மேற்கு அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் நர்மதா (40). இவர் அவ்வப்போது சென்னை நகரில் பல்வேறு நூதன போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வீட்டில் நண்டு விடும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில், கோயம்பேட்டில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் வசித்து வருகிறார். அவரது வீட்டின் முன்பு இன்று காலை 10.30 மணியளவில் நர்மதா பாஜ கொடியுடன் வந்தார். பின்னர் அக்கொடியை தூக்கில் தொங்கவிடும் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பெரும் பதற்றம் நிலவியது.

தகவலறிந்து கோயம்பேடு இன்ஸபேருந்து காவல்நிலைய இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் பெண் போலீசார் விரைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட நர்மதாவை கைது செய்து, காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதில், பாஜ தலைவர் முருகன் ரவுடியிசத்தில் ஈடுபடுவதை கண்டித்து போராட்டம் நடத்தியதாக தெரியவந்துள்ளது. அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Tags : Murugan ,BJP ,protests ,house , BJP leader, Murugan, party flag
× RELATED நீலகிரியில் வாழும் பழங்குடியின...