×

பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே இந்திய எல்லை அருகே புதிய ராணுவம் முகாம்கள் அமைக்கும் சீனா : ஆய்வில் சதித்திட்டம் அம்பலம்!!

லடாக் : ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே இந்திய எல்லை அருகே புதிய ராணுவம் முகாம்கள் மற்றும் போர் விமான தளங்களை சீனா அமைத்து வருவது அம்பலம் ஆகியுள்ளது. பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ராணுவ யுக்தி தொடர்பான அமைப்பு நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. 2017ம் ஆண்டு டோக்லாம் என்ற இடத்தில், சீனா சாலைப் பணியை தொடங்கிய போது, இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு பிறகு இந்திய எல்லை அருகே புதிய ராணுவ முகாம்கள், போர் விமானத் தளம், ஹெலிகாப்டர் இறங்கு தளம் ஆகியவற்றை சீனா அமைக்க தொடங்கியது. தற்போது லடாக் எல்லையில் சீனாவின் அத்துமீறலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்த பிறகு, திபெத், பீடபூமியில் புதிய ராணுவ தளங்களை சீனா அமைத்தது செயற்கை கோள் படங்கள் மூலம் தெரியவந்ததாக பெல்ஜியம் நாட்டு அமைப்பு கூறியுள்ளது.

திபெத், மான்ஸரோவர் ஏரி அருகே சீனா புதிய ஏவுகணை தளங்களை சீனா அமைத்ததும் தெரியவந்துள்ளது. தற்போது லடாக் எல்லை அருகே புதிய ராணுவ தளங்களை சீனா அமைந்திருப்பதும் அம்பலம் ஆகியுள்ளது. இதனிடையே எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிப்பது தொடர்பாக இந்தியா - சீனா ராணுவ அதிகாரிகள் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. ஆகையால் ஒரு சில நாட்களில் மீண்டும் கூடி பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பிலும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 


Tags : China ,border ,army camps ,Indian , China military camps...
× RELATED எல்லைப்பகுதியில் மீண்டும்...