×

இந்திய தொன்மையை கண்டறியும் குழுவில் தமிழர்களை சேர்க்கக்கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம்!!!


சென்னை:  இந்திய தொன்மையை கண்டறியும் குழுவில் தமிழர்களை சேர்க்கக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி இருக்கிறார். 12 ஆயிரம் ஆண்டு இந்திய கலாச்சார வரலாற்றை எழுதுவதற்காக 16 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்திருக்கிறது. தற்போது இந்த சேர்க்கை முறையானது கடும் விவாதங்களுக்குள்ளாகி இருக்கிறது. காரணம், இதில் தென் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஒருவரும் இடம்பெறவில்லை. இதனை கண்டித்து பல எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பி இருக்கின்றனர். இந்த நிலையில்தான் தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்திய தொன்மையை கண்டறியும் குழுவில் தமிழர்களை சேர்க்கக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றினை எழுத்தியுள்ளார்.

அதில், இந்திய கலாச்சார தொன்மைகளை கண்டறிய மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதற்காக ஒரு குழுவையும் அமைத்துள்ளது. இவை மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயத்தில், இந்திய வரலாற்றை கண்டறியும் குழுவில் தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் அதிலும் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்தவர்கள் யாரும் இடம்பெறாமல் இருக்கின்றனர். தமிழகம் என்பது சிறந்த மாநிலமாக திகழ்ந்து வருகிறது. அதிலும் தமிழர்களின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் பல்வேறு கலாச்சார வழிமுறைகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வில் 6ம் நூற்றாண்டை சேர்ந்தவர்கள் வாழ்ந்து வந்ததற்கான ஆதாரங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

 இதனால் இத்தனை கலாச்சார சிறப்புகளை கொண்ட மாநிலமாகவும், மொழியில் சிறந்து விளங்கும் மாநிலமாகவும் தமிழ்நாடு இருந்துகொண்டிருக்கும் சூழ்நிலையில், இங்குள்ள தமிழர்கள் யாரேனும் அந்த குழுவில் இடம்பெற்றிருக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். மேலும் பிரதமர் மோடி அண்மையில் தமிழகத்திற்கு வருகை புரிந்தபோதும், மகாபலிபுரத்தில் உள்ள கலாச்சார தொன்மைகளை பார்வையிட்டார்.

இதனால் 12 ஆயிரம் ஆண்டு இந்திய கலாச்சார தொன்மைகளை கண்டறியும் குழுவில் தமிழகத்திலிருந்து ஒருவர் இடப்பெறவில்லை என்றால் அந்த ஆராய்ட்சியானது முழுமையானதாக இருக்காது. ஆகவே இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு தமிழகத்தை சேர்ந்த முக்கியமான ஆய்வாளர்களையும் இந்திய தொன்மையை கண்டறியும் குழுவில் சேர்த்துக்கொள்ள வேண்டும, என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் இதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படுமா?, பதில் அளிக்கப்படுமா? என வினவியும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதியுள்ளார்.



Tags : Palanisamy ,Modi ,Tamil Nadu ,Tamils ,Indian Antiquities Commission , Indian Antiquities, Group ,, Tamils, Prime Minister Modi, Chief Minister of Tamil Nadu Palanisamy, Letter
× RELATED தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும்...