×

நகர் முழுவதும் பள்ளம் ஜவ்வாய் இழுக்கும் சாலை பணி: பழநி மக்கள் கடும் அவதி

பழநி: அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்கும் பழநி நகரை மேம்படுத்தும் வகையில் ரூ.58 கோடியில் சாலை விரிவாக்கப்பணி நடந்து வருகிறது. இதற்காக ஒரே நேரத்தில் நகரில் உள்ள அனைத்து சாலைகளும் தோண்டப்பட்டுள்ளன. இதனால் வாகனங்கள் பல இடங்களில் திருப்பி விடப்பட்டுள்ளன. முறையான திட்டமிடல் இல்லாததால் பழநி நகரில் தற்போது கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. நகர் முழுவதும் பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் தற்போது சாலை விரிவாக்கப்பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. சொற்பமான அளவில் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

மழைக்காலம் நெருங்கி விட்ட நிலையில் மந்தகதியில் நடைபெறும் இப்பணி தற்போதைக்கு நிறைவடையாத நிலையில் உள்ளது. ஒப்பந்தம் எடுத்தது ஆளுங்கட்சி பிரமுகரின் வாரிசாக இருப்பதால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் அழுத்தம் கொடுக்க முடியாத நிலையில் உள்ளனர். தவிர, பணிகளும் தரமின்றி நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் போராட்டங்கள் நடத்தி உள்ளனர். ஆனாலும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் ஆமை வேகத்தில் நடைபெறும் சாலைப்பணியை விரைவாகவும், தரமானதாகவும் நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Jawwai ,city ,Palani , Palani, road work
× RELATED மயிலாடும்பாறை அருகே சாலைப்பணி தீவிரம்