×

ஜல்லிப்பட்டியில் மக்களை அச்சுறுத்தும் மரநாய்களை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை

உடுமலை: மக்களை அச்சுறுத்தும் அரிய வகை மரநாய்களை கூண்டுவைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் ஜல்லிப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு ஆடு, கோழி என கால்நடை வளர்ப்பு தொழில் பிரதானமாக உள்ளது. அவ்வப்போது காட்டு யானைகள் மற்றும் காட்டுப்பன்றி தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், அரிய வகை மர நாய், இரண்டு குட்டிகளுடன் அப்பகுதியில் இரவு நேரங்களில் சுற்றித்திரிகிறது. இதனால், கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பெருச்சாளியை வேட்டையாடிய மர நாய், கோழிக்குஞ்சுகளையும் கவ்விச் செல்கிறது. பொதுமக்கள் விரட்டினால் மரத்தில் ஏறி இலைகளுக்குள் மறைந்து கொள்கிறது. விஷத்தன்மை கொண்ட இந்த மரநாய், பொதுமக்களை கடித்தாலும் உடனே உயிரிழப்பு ஏற்படும் என அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே, வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து, மரநாயை வனத்தில் விட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Wood dog, Udumalai
× RELATED சென்னை விமான நிலையத்தில் ரூ.11 கோடி...