×

நெல்லையில் காரில் கடத்திச் சென்று கொலை செய்யப்பட்ட இளைஞர் செல்வன் வழக்கில் விசாரணை தொடங்கியது சி.பி.சி.ஐ.டி.

நெல்லை: நெல்லையில் இளைஞர் செல்வன் கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது. சொக்கன்குடியிருப்பை சேர்ந்த இளைஞர் செல்வன் நிலத்தகராறில் கடத்திக் கொலை செய்யப்பட்டார், இந்த கொலை வழக்கில் 6 குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்த   சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சொக்கன்குடியிருப்பில் கடந்த செப்டம்பர் 17-ம் தேதி செல்வம் என்பவர் மர்மகும்பலால் காரில் கடத்தி சென்று கொலை செய்யப்பட்டார். இந்தக் கொடூரத்தின் பின்னணியில் அதே பகுதியில் காவல் ஆய்வாளராக பணிபுரியும் ஹரிகிருஷ்ணனுக்கும் சம்பந்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியாகவும் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

அ.தி.மு.க-வின் மாவட்ட வர்த்தகப் பிரிவு செயலாளரா இருக்கும் திருமணவேல் என்பவர் இந்தப் பகுதியில கட்டப் பஞ்சாயத்து, நிலமோசடிகளில் ஈடுபட்டு வந்தள்ளார். கடந்த ஜனவரி 19-ம் தேதியும் இந்தப் பிரச்னையால் பங்காருராஜனை திருமணவேலின் ஆதரவாளர்கள் தாக்கினார்கள் என கூறப்படகிறது. இதையடுத்து செல்வனைத் தாக்கிய திருமணவேல், அவரின் ஆதரவாளர்கள், கொலைக்குத் தூண்டிய ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் ஆகியோரை கைதுசெய்ய வேண்டும் எனக்கோரி செல்வனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து திருமணவேல், ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட சிலர் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


Tags : Selvan ,CPCID ,investigation ,Nellai , Nellai, murder, wealth, investigation, CPCID.
× RELATED விஜய் சேதுபதி, ஆர்யா வெளியிட்ட அசோக்...