5 ஆண்டுகளில் 58 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் ; ரூ. 517.82 கோடி ..பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் குறித்து மத்திய அரசு விளக்கம்!

டெல்லி : பிரதமர் மோடி 5 ஆண்டுகளில் 58 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதவாகவும் இதற்கு ரூ. 517.82 கோடி செலவிடப்பட்டதாகவும் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளீதரன் எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015 மார்ச் முதல் 2019 நவம்பர் வரை பிரதமர் மோடி 58 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

பிரதமரின் பயணங்களுக்கு ரூ. 517.82 கோடி செலவிடப்பட்டுள்ளது.

மேலும், அந்த காலத்தில் எந்தெந்த நாடுகளுக்கு மோடி சென்றார் என்ற பட்டியலிலும், வெளிநாட்டு பயணத்தின்போது இந்தியா கையெழுத்திட்ட ஒப்பந்தங்கள் குறித்து விவரங்களும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணம், வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், கடல்சார், விண்வெளி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்பட பல்வேறு துறைகளில் வெளிநாடுகளுடனான இந்திய உறவுகளை பலப்படுத்தியுள்ளது என முரளீதரன் தெரிவித்தார்.

Related Stories:

>