×

விளைச்சல் குறைவால் விலை அதிகரிப்பு மலைப்பூண்டு கிலோ ரூ.300ஆக உயர்வு

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைக்கிராமங்கில் அதிகளவில் மலைப்பூண்டு பயிரிடப்படுகிறது. இந்த வருடம் அதிக மழை காரணமாக பூண்டு விளைச்சல் குறைந்துள்ளது. கடந்த வருடம் கிலோ ரூ.200க்குள் விற்ற மலைப்பூண்டு, இந்த ஆண்டு ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனை ஆகிறது. இங்கு விளையும் பூண்டு தேனி மாவட்டம், வடுகபட்டியில் உள்ள சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. அங்குள்ள வியாபாரிகளால் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. விவசாயிகள் கூறுகையில், ‘‘மகப்பேறு காலங்களில் பெண்களுக்கு இந்த மலைப்பூண்டுகளையே மருந்தாக பயன்படுத்துகின்றனர். அதிக மருத்துவ குணம் கொண்ட கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு மத்திய அரசு கடந்த வருடம் புவிசார் குறியீடு வழங்கியது’’ என்றார்.


Tags : Increase in price due to low yield
× RELATED அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில்...