நீலாங்கரை இன்ஸ்பெக்டர் உள்பட 8 பேருக்கு கொரோனா

சென்னை: நீலாங்கரை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் உள்பட 8 போலீசாருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், மாநகர காவல் துறையில் நேற்று நீலாங்கரை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் என 8 போலீசாருக்கு தொற்று உறுதியானது. அதை தொடர்ந்து 8 போலீசாரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மீட்டு மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை முகாமில் அனுமதித்துள்ளனர்.  

சென்னை மாநகர காவல் துறையில் ேநற்று வரை 2,431 போலீசார் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அயனாவரம் உதவி கமிஷனர் சீனிவாசன் உட்பட 19 பேர் குணமடைந்து பணிக்கு திரும்பினர். இதையடுத்து தொற்றில் இருந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று வரை 2,184ஆக உயர்ந்துள்ளது.

Related Stories:

More
>