×

காலாவதியான கட்டமைப்புகள் உதவாது ஐநா.வில் காலத்துக்கேற்ற சீரமைப்பு தேவை: மோடி

புதுடெல்லி: ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலமாக, பிரதமர் நரேந்திர மோடி நேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது:  காலத்துக்கேற்ற மாற்றங்களை செய்யாததால், ஐ.நா நம்பகத்தன்மையை இழக்கும் நிலையை எதிர்கொண்டிருக்கிறது. இன்றைய ஒருங்கிணைந்த உலகத்துக்கு, மறுசீரமைக்கப்பட்ட பன்முக சார்புதான் தேவைப்படுகிறது. சமகால சவால்களுக்கு தீர்வு காணும் வகையிலும், மனித நலத்தின் மீது கவனம் செலுத்தும் வகையிலும் அது இருக்க வேண்டும்.  ஏனெனில், காலாவதியான கட்டமைப்புகளை வைத்துக்கொண்டு, இன்றைய சவால்களை எதிர்கொண்டு வெற்றிபெற முடியாது. எனவே, இந்த சீர்திருத்தங்களை அடைய, மற்ற நாடுகளுடன் இணைந்து செயல்பட இந்தியா விரும்புகிறது.

 ஐ.நா சீர்திருத்தங்களை மேற்கொள்வதில், இந்தியா பல ஆண்டுகளாகவே முன்னணி பங்களிப்பாளராக திகழ்ந்துள்ளது. 75 ஆணடுகளுக்கு முன்பு, போரின் கொடூரங்களில் இருந்து ஒரு நம்பிக்கை பிறந்தது. மனிதகுல வரலாற்றில் முதல் முறையாக, உலகம் முழுவதுக்குமான ஒரு அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. ஐ.நா.வால்தான் இந்த உலகம் சிறந்ததொரு வாழ்விடமாக திகழ்கிறது.  ஆனாலும், எத்தனையோ சாதனைகளை செய்திருந்தாலும், இந்த அமைப்பின் பிரதான நோக்கம் இன்னும் முழுமை அடையாமல்தான் இருக்கிறது. மோதல்களை தடுப்பது, வளர்ச்சியை உறுதி செய்வது, பருவநிலை மாற்றங்களுக்கு தீர்வு காண்பது, ஏற்றத்தாழ்வை போக்குவது மற்றும் டிஜிட்டல் தொழில் நுட்பத்தை ஊக்குவிப்பது ஆகியவற்றில் இன்னும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : UN ,Modi , Outdated structures do not help UN needs timely restructuring: Modi
× RELATED மோடி ஆட்சியை பார்த்து ஐநா சபையே சிரிக்கிறது