×

தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஒரே நாளில் 520 குறைந்தது: சவரன் 39 ஆயிரத்துக்கு கீழ் சரிந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 520 குறைந்தது. தங்கம் விலை கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காலக்கட்டத்தில் வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. ஆகஸ்ட் 7ம் தேதி ஒரு சவரன் விலை 43,328 என்ற புதிய உச்சத்தை தொட்டது. அதன் பிறகு தங்கம் விலை உயர்வதும், குறைவதுமான போக்கு காணப்பட்டது. கடந்த சனிக்கிழமை ஒரு சவரன் 39,664க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம் யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை குறைந்தது.  ஒரு கிராம் 4,915க்கும், சவரன் 39,320க்கும் விற்கப்பட்டது.

இந்நிலையில் இரண்டாவது நாளாக நேற்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. கிராமுக்கு 65 குறைந்து ஒரு கிராம் 4,850க்கும், சவரனுக்கு 520 குறைந்து ஒரு சவரன் 38,800க்கு விற்கப்பட்டது. இரண்டு நாட்களில் மட்டும் சவரன் 864 அளவுக்கு குறைந்துள்ளது. தங்கம் விலை குறைந்து வருவது நகை வாங்குவோருக்கு சந்தோஷத்தை ஆழ்த்தியுள்ளது. அதே நேரத்தில் சவரன் 39 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியுள்ளது நகை வாங்குவோருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.



Tags : Gold prices fall sharply to 520 in one day
× RELATED ஏப்ரல் 1 ஆம் தேதி ரூ.2000 நோட்டுகளை மாற்ற முடியாது: ரிசர்வ் வங்கி அறிவிப்பு