×

ஏகாட்டூர் ஏரியில் சவுடு மண் திருட்டு: 7 லாரிகள் பறிமுதல்

திருவள்ளூர்: ஏகாட்டூர் ஏரியில் இரவு நேரங்களில் சவுடு மண் திருடிய 7 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். திருவள்ளூர் அடுத்த ஏக்காட்டூர் ஏரியில் சவுடு மண் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த ஏரியிலிருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான லாரிகள் அணிவகுத்து வந்து இரவு, பகல் நேரங்களில் சவுடு மண் அள்ளி செல்கின்றன. இந்நிலையில், ஏரியிலிருந்து சவுடு மண் எடுக்க இரவு நேரங்களில் அதிக லாரிகள் வருவதால் சிரமமாக இருப்பதாக ஏகாட்டூர் கிராம மக்கள் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, திருவள்ளூர் மாவட்ட சிறப்பு காவல் படை பிரிவு போலீசார் விரைந்து சென்று இரவு நேரங்களில் மண் எடுப்பதற்காக வந்த 7 லாரிகளை பிடித்து கடம்பத்தூர் காவல் நிலையத்தில் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், போலீசார் அந்த லாரிகளை பறிமுதல் செய்து இரவு நேரங்களிலும் சவுடு மண் லாரியில் அள்ளி செல்ல யார் அனுமதி கொடுத்தது என்றும், முறைகேடாக இரவு நேரத்திலும் மண் எடுப்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Ekattur Lake , Sewage theft at Ekattur Lake: 7 lorries seized
× RELATED விதிகளை மீறி ஓவர் லோடுடன்...