மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் இணையவழி தொடக்க விழா

காஞ்சிபுரம்: மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இணையவழி தொடக்கவிழா நடந்தது. கல்லூரி நிறுவனர் மற்றும் தாளாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். ஆங்கில துறை உதவி பேராசிரியர் நாராயணசாமி வரவேற்றார். தனலட்சுமி சீனிவாசன் பெரம்பலூர் தன்னாட்சி பெற்ற பெண்கள் கல்லூரி முதல்வர் அப்ரோஸ், பொறியியல் கல்லூரி முதல்வர் சேகர், கல்லூரி துணை முதல்வர் ரம்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், கல்லூரி 3ம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவி பவித்ரா, சிஎன்டி மாணவி கீர்த்திகா ஆகியோர், கல்லூரியின் சிறப்புகளை கூறி முதலாமாண்டு மாணவர்களை வரவேற்றனர். முதலாமாண்டு மாணவிகள் யுவஸ்ரீ, ஸ்வேதா ஆகியோர் பேசினர். முடிவில் தமிழ்த்துறை தலைவர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

Related Stories:

>