×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விஏஓக்களுக்கு பணிமூப்பு நிர்ணயம் செய்யாமல் கலந்தாய்வு: கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் புகார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணிமூப்பு நிர்ணயம் செய்யாமல் கலந்தாய்வு நடத்தப்படுவதாக, கலெக்டர் பொன்னையாவிடம், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில தலைவர் சீனுவாசன், புகார் மனு அளித்தார். அதில், கூறியிருப்பதாவது. ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் பணிபுரிந்து கொரோனா பாதிப்பால் உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலர் மோகன் குடும்பத்துக்கு, அரசு வழங்கும் கொரோனா தொகுப்பு நிதியை உடனடியாக வழங்க வேண்டும். அவரது மனைவிக்கு கருணை அடிப்படையில் அரசு பணி உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணிமூப்பு நிர்ணயம் செய்யாமல் கலந்தாய்வு நடக்கிறது. இதனால் கிராம நிர்வாக அலுவலர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, தற்போது ஸ்ரீபெரும்புதூர் கோட்டத்தில் நடைபெற உள்ள கலந்தாய்வில், பணிமூப்பு நிர்ணயம் செய்து பொது கலந்தாய்வு நடத்த வேண்டும். புதிதாகப் பொறுப்பேற்றுள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உடனடியாக நில அளவை பயிற்சி, கிராம நிர்வாக பயிற்சி, சிறப்பு தேர்வு நடத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags : VOs ,Kanchipuram district , Consultation without fixing seniority for VOs in Kanchipuram district: Grama Niladhari Association Complaint
× RELATED மாற்றுத்திறனாளிகள் பழைய பஸ்பாசை ஜூன்...