கேள்வி குறியான பாலிவுட் திரையுலகம்: போதைப்பொருள் புகாரில் சிக்கினார் தீபிகா படுகோன்: வாட்ஸ் ஆப் தகவல் பரிமாற்றத்தை கைப்பற்றியது காவல்துறை.!!!

மும்பை:  மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கிற்கு கஞ்சா விநியோகித்த குற்றச்சாட்டின் பேரில் நடிகை ரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், போதை கும்பலின் வாட்ஸ் ஆப் தகவலின் அடிப்படையில் நடிகை தீபிகா படுகோன் மீது போதைப்பொருள் தடுப்புப்பிரிவு கவனத்தை திருப்பியுள்ளது. நடிகை ரியா சக்கரவர்த்தியுடன் தொடர்பிருந்தவர்களின் வாட்ஸ் ஆப் பதிவுகளை போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். அப்போது போதைப்பொருள் கும்பலை சேர்ந்த கரிஷ்மா பிரகாஷ் என்பவருடன் நடிகை தீபிகா படுகோன் வாட்ஸ் ஆப்-பில் நடத்திய தகவல் பரிமாற்றம் சிக்கியுள்ளது.

அதாவது கரிஷ்மா என்பவர் தீபிகாவின் மேலாளராவார். இதனைத்தொடர்ந்து அந்த உரையாடலில், போதைப்பொருள் உள்ளதா? என அவர் வினவுவதும், எப்போது? யார்? மூலம் கிடைக்கும் என்று கேட்பதும் பதிவாகியுள்ளது. பின்னர், தீபிகா படுகோனுவின் மேனேஜரை போலீசார் விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பி உள்ளனர்.  

இதையடுத்து நடிகை தீபிகா படுகோனுக்கும் சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரணை நடத்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவு திட்டமிட்டு வருகிறது. தீபிகா படுகோன் மட்டுமல்லாது, சாரா அலிகான், ஷர்த்தா கபூர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பிரபல நடிகைகளுக்கும் போதை கும்பலுடன் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளனர். மேலும் இவர்கள் அனைவரும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட உள்ளனர். பாலிவுட் திரையுலக நடிகைகளின் பெயர்கள் போதைப்பொருள் விவகாரத்தில் வெளிவருவது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>