×

வீட்டை விட்டு மகன் விரட்டியதால் மண் சோறு சாப்பிட்டு தம்பதி போராட்டம்

திருச்சி: திருச்சி நவலூர் குட்டப்பட்டை சேர்ந்தவர் சின்னபொண்ணு (70). இவரது முதல் கணவர் இறந்துவிட்டார். அவருக்கு ஒரு மகன் உள்ளார். இதையடுத்து சின்னபொண்ணு நாகராஜ் என்பவரை 2வதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். முதல் கணவர் இறந்த நிலையில், சின்னபொண்ணு தனது பெயரில் இருந்த சொத்துகளை 20 ஆண்டுக்கு முன் மகன் பெயருக்கு எழுதி கொடுத்து விட்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டிலிருந்த சின்னபொண்ணுவை குடும்பத்துடன் அவரது மகன் வீட்டைவிட்டு வெளியேற்றி விட்டார். இதனால் சொத்துகளை மகனிடமிருந்து மீட்டு தர கோரி சின்னபொண்ணு, அவரது கணவர் நாகராஜுடன் நேற்று காலை கலெக்டர் அலுவலகம் வந்து அங்கு மண் சோறு சாப்பிட்டு போராட்டம் நடத்தினார்.

தகவல் அறிந்து வந்த கலெக்டர் சிவராசு, தம்பதியிடம் விசாரணை நடத்தியபோது, சின்னபொண்ணு திடீரென கலெக்டரின் காலில் விழுந்ததோடு, வீட்டை விட்டு மகன் விரட்டிதால் வாழவழியின்றி தவித்து வருவதாக கூறி கதறி அழுதார். இதுகுறித்து விசாரணை நடத்திய கலெக்டர், நீங்களே மகன் பெயருக்கு சொத்தை எழுதி கொடுத்துள்ளீர்கள். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பார்கள். மேலும் ஜீவனாம்சம் பெற்று தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கூறினார். இதையடுத்து அவர்கள் மனுவை கலெக்டரிடம் அளித்துவிட்டு அங்கிருந்து கண்ணீருடன் சென்றனர்.

தான செட்டில்மென்ட் ரத்து

சின்னபொண்ணு அளித்த புகாரின் பேரில் உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து விசாரணை நடத்திய தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை அறிக்கையை கலெக்டருக்கு சமர்ப்பித்தனர். இதை தொடர்ந்து கடந்த 2005ல் சின்னபொண்ணு அவர்களது மகன் மகளுக்கு தான செட்டில்மென்டை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Tags : house , Couple, struggle, mud porridge
× RELATED ஏட்டு வீட்டில் திருடிய 2 பேரை காவலில் எடுத்து விசாரணை