×

மத்திய பல்கலைக்கழக புவியியல் குழு அகரத்தில் மண் மாதிரிகள் சேகரிப்பு

திருப்புவனம்: மத்திய பல்கலை கழகத்தைச் சேர்ந்த புவியியல் பிரிவு வல்லுனர் குழுவினர் நேற்று அகரத்தில் ஆய்வுக்காக மண் மாதிரிகளை சேகரித்தனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இதேபோல் கொந்தகை, மணலூர், அகரம் ஆகிய இடங்களிலும் அகழாய்வு தொடங்கி நடந்து வருகிறது. கீழடியில் பிப்ரவரியில் தொடங்கிய அகழாய்வு பணிகள் செப்டம்பருடன் முடிவடைய உள்ளன. இதனிடையே, கடந்த 2 நாட்களுக்கு முன் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக நிலவியல் துறை பேராசிரியர் ஜெயம்கொண்ட பெருமாள் தலைமையிலான குழு, கீழடி, அகரம் ஆகிய பகுதிகளில்  மண்ணின் தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டது. இதில் அகரம் ஆழமான பகுதியாக இருப்பதால் இங்கு கூடுதலாக புவியியல் பிரிவு வல்லுனர்கள் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, நேற்று மதியம் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக புவியியல் பிரிவு பேராசிரியர் பாலசுப்ரமணியன் தலைமையிலான குழுவினர், மண் அடுக்குகளில் மாதிரிகளை சேகரித்தனர். பிளாஸ்டிக் பைகளிலும், பிளாஸ்டிக் குழாய்களிலும் 4 மீட்டர் ஆழத்தில்  தனித்தனியாக மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
 
மண்பாண்ட பொருட்கள் உள்ளிட்டவற்றை காட்டிலும் மண்ணின் தன்மையை வைத்து ஆண்டுகளை கூட கணக்கிட வாய்ப்புண்டு. எனவே கீழடியில் வசித்த மக்களின் ஆண்டுகளை கணக்கிட மண்ணின் தன்மை ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது.

Tags : Central University Geography Committee , Geographical group, soil samples, akaram
× RELATED மதுரை சித்திரை திருவிழா: ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் ஏப்.21ம் தேதி ஆய்வு