×

வேதாரண்யம் தாலுகாவில் பனி, பூச்சி தாக்குதலால் முந்திரி மரங்களில் கருகிய பூக்கள்

வேதாரண்யம்: வேதாரண்யம் தாலுகாவில் செம்போடை, தேத்தாகுடி, புஷ்பவனம், கரியாப்பட்டினம், ஆயக்காரன்புலம், நெய்விளக்கு, குரவப்புலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள முந்திரிகள் வெப்பத்தை தாங்கி வளரக் கூடியதாகும். இப்பகுதியில் விளையும் முந்திரி தரமாகவும் அளவில் பெரியதாகவும், ருசியானதாகவும் காணப்படும். இதனால் இப்பகுதியில் விளையும் முந்திரி பருப்பு கிலோ ரூபாய் 500 முதல் 700 வரை விலை போகும். தற்போது முந்திரி மரங்கள் பூத்து காய்க்கும் நிலையில் உள்ளது. சென்ற மாதம் பெய்த கடும் பனி மற்றும் பூச்சி தாக்குதலால் பூத்த முந்திரி பூக்கள் கருகி போய்விட்டன.இதனால் முந்திரி விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் தாக்குதலுக்குப் பிறகு ஓரளவு முந்திரி மரங்கள் வளர்ந்து காய்க்கும் நிலையில் இந்த பூச்சி தாக்குதலால் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே வேளாண் துறையினர் இதற்கு தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்….

The post வேதாரண்யம் தாலுகாவில் பனி, பூச்சி தாக்குதலால் முந்திரி மரங்களில் கருகிய பூக்கள் appeared first on Dinakaran.

Tags : Vedaranya Thaluga ,Cemboda ,Tethakudi ,Pushpavanam ,Gariapattinam ,Ayakaranpuram ,Naillamp ,Kuravapalam ,Dinakaran ,
× RELATED கடல் நீரோட்டத்தில் மாற்றம்; புஷ்பவனம்...