வீட்டுக்கடன், சில்லறைக் கடனை திருப்பி செலுத்த 2 ஆண்டுகள் அவகாசம் எடுத்துக் கொள்ளலாம்: பாரத ஸ்டேட் வங்கி

டெல்லி: வீட்டுக்கடன்கள் மற்றும் சில்லறை கடன்கள் வாடிக்கையாளர்கள் திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசத்தை 2 ஆண்டுகள் வரை நீட்டித்துக் கொள்ளலாம் என பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்திருக்கிறது. கொரோனா பாதிப்பு தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் தாங்கள் பெற்ற வீட்டுக்கடன் அல்லது சில்லறை கடனை திருப்பி செலுத்த 2 ஆண்டுகள் அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் அல்லது மாத தவணையை இரண்டு ஆண்டுகளுக்கு மறுசீரமைப்பு செய்து நீட்டித்துக் கொள்ளலாம் என பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்திருக்கிறது.

2020ம் ஆண்டு மார்ச் மாதம் 1ம் தேதிக்கு முன், பாரத ஸ்டேட் வங்கியில் கடன் பெற்று இதுவரை தவணைத் தொகையை தவறாமல் செலுத்தி, கொரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த சலுகையை பெற்று கொள்ளலாம் என பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்திருக்கிறது. 2 ஆண்டுகளுக்கு கடன் மறுசீரமைப்பு நீட்டிப்பு திட்டத்தை தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களிடம் ஆண்டுக்கு கூடுதலாக 0.35 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும் எனவும், பாரத ஸ்டேட் வங்கி கூறியிருக்கிறது. இந்த சலுகையை பெற விரும்பும் எஸ்.பி. ஐ. சலுகை வாடிக்கையாளர்கள், முதலில் இணையதளத்தில் பதவி செய்துகொண்டு சம்பந்தப்பட்ட வங்கி கிளையை அணுக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எஸ்.பி.ஐ.யின் சலுகை திட்டத்தை விரைவில் ஹெச்.சி.எஃப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ., உள்ளிட்ட வங்கிகள் பின்பற்றும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories:

>