போராட்டத்தில் உள்ள எம்.பி.க்களுக்காக டீ கொண்டு வந்த மாநிலங்களவை துணைத் தலைவர்: இது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது...!! பிரதமர் மோடி புகழாரம்

டெல்லி : நாடாளுமன்ற வளாகத்தில் 2-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள 8 எம்.பி.க்களுக்காக மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஷ் டீ கொண்டு வந்தார். மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் கொடுத்த டீயை சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்.பி.க்கள் வாங்க மறுத்து விட்டனர்.  நாடாளுமன்ற மாநிலங்களவையில் வேளாண் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட போது கடும் அமளி ஏற்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினார்கள். திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட சில கட்சிகளின் உறுப்பினர்கள் துணைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு கடும் அமளியில் ஈடுபட்டனர். அவையில் விதிமுறைகளை மீறி நடந்து கொண்ட உறுப்பினர்கள் 8 பேரை ஒருவாரம் சஸ்பெண்ட் செய்து மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டார்.

இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து 8 எம்.பிக்களும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக தர்ணாவில் நேற்று ஈடுபட்டனர். இரவு முழுவதையும் காந்தி சிலை முன்பே அமர்ந்த எம்.பிக்கள், தங்கள் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்படும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் எனவும் உறுதிபட கூறினர். இந்நிலையில் தொடர்ந்து 2வது நாளாக நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து 2-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள 8 எம்.பி.க்களுக்காக மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஷ் டீ கொண்டு வந்தார். ஆனால் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் கொடுத்த டீயை சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்.பி.க்கள் வாங்க மறுத்து விட்டனர்.

பிரதமர் மோடி புகழாரம்

சில நாட்களுக்கு முன்பு அவரைத் தாக்கி அவமதித்தவர்களுக்கும், தர்ணாவில் அமர்ந்தவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் தேநீர் பரிமாறுவது ஹரிவன்ஷ் ஒரு தாழ்மையான மனதுடனும், பெரிய இதயத்துடனும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. அது அவருடைய மகத்துவத்தைக் காட்டுகிறது. ஹரிவன்ஷ் அவர்களை போன்று வாழ்த்துவதில் நான் இந்திய மக்களுடன் இணைகிறேன் என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

Related Stories:

>