×

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைவு ஆர்டிஓ ஆபீசில் ஸ்லாட் சிஸ்டம் விரைவில் ரத்து

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து ஆர்டிஓ அலுவலகங்களில் நடைமுறையில் இருந்த ‘ஸ்லாட் சிஸ்டம்’ விரைவில் ரத்து செய்யப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, அரசு அலுவலகங்கள் மூடப்பட்டது. அந்தவகையில் ஆர்டிஓ அலுவலகங்களும் செயல்படவில்லை. பிறகு, கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து, அலுவலகங்கள் செயல்படத் துவங்கின.  இதையடுத்து ‘ஸ்லாட் சிஸ்டம்’ என்ற முறை அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் பல்வேறு தரப்பினரிடமிருந்து வந்த கோரிக்கையினை ஏற்று, ‘ஸ்லாட் சிஸ்டம்’ முறை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆர்டிஓ அலுவலகங்களுக்கு மக்கள் அதிகம் வருவதை கட்டுப்படுத்தும் வகையில் ‘ஸ்லாட் சிஸ்டம்’ முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி ஒவ்வொரு ஆர்டிஓ அலுவலகங்களிலும் தினசரி 45 பேர் மட்டுமே, அவர்களது பணியை  செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். பிறகு 75 ஆக உயர்த்தப்பட்டது.  இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து பொதுமக்கள், மண்டல அலுவலகங்கள் ேபான்றவற்றிலிருந்து ‘ஸ்லாட் சிஸ்டம்’ முறையை திரும்பப்பெற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து ஆர்டிஓ  அலுவலகங்களில் ஸ்லாட் சிஸ்டம் முறை விரைவில் ரத்து செய்யப்படலாம். அதையடுத்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பணிகளை மேற்கொள்ள முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : office ,RTO ,Tamil Nadu , Slot system in RTO office in Tamil Nadu will be canceled soon
× RELATED கலெக்டர் அலுவலகத்தில் புறக்காவல் நிலையம்