×

கோயில் சொத்து விவரங்களை ஆன்லைனில் பதிவேற்ற அதிகாரிகளுக்கு பயிற்சி

சென்னை: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44,120 கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கு சொந்தமாக பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளது. இவற்றில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை இந்து  சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டு வருகின்றனர். இந்தநிலையில், கோயில்களுக்கு சொந்தமான நிலம், திருப்பணி உள்ளிட்ட விவரங்களை  அறநிலையத்துறையின் இணையதளத்தில் பதிவேற்ற முடிவு செய்யப்பட்டது.  

 இதைத்தொடர்ந்து அறநிலையத்துறை இணையதளத்தில் விவரங்களை பதிவேற்றம் செய்வது குறித்து அதிகாரிகளுக்கு காணொலி காட்சி மூலம் நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் மண்டல இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள்,  உதவி ஆணையர்கள் கோயில் அலுவலர்களுக்கு திருப்பணி, நிலங்கள் உள்ளிட்டற்றின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து தேசிய தகவலியல் மையத்தின் அதிகாரிகள் நேற்று காணொலி காட்சி மூலம் பயிற்சி  அளித்தனர்.

Tags : Training for officers to upload temple property details online
× RELATED வேளாண் அலுவலர்களுக்கு உத்தரவு...