×

5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

சென்னை: பணீந்திர ரெட்டி உள்ளிட்ட 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் அந்துஸ்துக்கு இணையான பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது:  விபு நாயர் (தமிழ்நாடு சிறுதொழில் நிறுவன மேலாண் இயக்குநர்-டான்சி), கே.பணீந்திர ரெட்டி (வருவாய் நிர்வாக ஆணையர்), எம்.சாய்குமார் (முதல்வரின் செயலாளர்), பி.சிவசங்கரன் (நகர்ப்புற உச்சவரம்பு மற்றும் நிலவரி), டி.எஸ்.ஜவஹர்  (போக்குவரத்து துறை ஆணையர்) ஆகிய 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் தலைமை செயலாளர் அந்தஸ்துக்கு இணையான பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.Tags : IAS officers , Promotion to 5 IAS officers
× RELATED வனக்காப்பாளர்கள் 170 பேருக்கு பதவி உயர்வு