×

மினி வேனில் வாலிபர் தற்கொலை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பெரவளூர் பகுதியை சேர்ந்தவர் ராஜிவ்காந்தி (36). இவர், சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சர் கடை வைத்துள்ளார். இவரது மனைவி மீனா (27). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. கருத்துவேறுபாடு காரணமான கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.  இந்நிலையில் நேற்று முன்தினம் இருவரும் விவாகரத்து செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த ராஜிவ்காந்தி தனது கடையில் நிறுத்தப்பட்டிருந்த மினிவேனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த கவரப்பேட்டை போலீசார் அவரின் சடலத்தை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு  பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.  

மற்றொரு சம்பவம்: திருவேற்காடு மேல் அயனம்பாக்கம் ராஜிவ் காந்தி நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (43). கார் டிரைவர். இவரது மனைவி வசந்தி (38), இவர்களுக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.  நேற்று வசந்தி வீட்டில் உள்ள அறைக்குள் சென்றவர் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த கணவர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த திருவேற்காடு  போலீசார் விரைந்து வந்து வசந்தியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில் கடன் பிரச்னையால் ஏற்பட்ட மன உளைச்சலில்  வசந்தி தற்கொலை செய்தது தெரியவந்தது.


Tags : suicide , Youth commits suicide in mini van
× RELATED புதுச்சேரியில் ஆன்லைன் ரம்மி...