×

தவறான சிகிச்சையால் நாய் இறந்ததாக டாக்டர் மீது போலீசில் புகார்

பெரம்பூர்: அண்ணாநகர் 2வது தெருவை சேர்ந்த யோகேஸ்வரன் (50), வீட்டில் உயர் ரக நாய் வளர்த்து வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன் அந்த நாய்க்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கீழ்ப்பாக்கம் மேடவாக்கம் டேங்க் சாலையில் உள்ள கால்நடை மருத்துவர் ஆல்வினிடம் சிகிச்சை அளித்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நாய் திடீரென இறந்தது. டாக்டரின் தவறான சிகிச்சையே நாய் இறந்ததற்கு காரணம். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று காலை யோகேஸ்வரன் தலைமை செயலக காலனி போலீசில் புகார் கொடுத்தார்.  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : doctor , The doctor complained to the police that the dog had died due to improper treatment
× RELATED DOG கஃபே!