×

தேசியக்கொடிதான் கோட்டையில் பறக்கும்: அமைச்சர் உதயகுமார் பதிலடி

மதுரை: தமிழகத்தில் எந்த ஆட்சி வந்தாலும், கோட்டையில் தேசியக்கொடிதான் பறக்கும் என பாஜ தலைவருக்கு அமைச்சர் உதயகுமார் பதிலடி கொடுத்தார். மதுரையில் அமைச்சர் உதயகுமார் அளித்த பேட்டியின்ேபாது, ‘தமிழகத்தின் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் காவிக் கொடி பறக்கும் என பாஜ மாநில தலைவர் முருகன் பேசியுள்ளாரே?’ என நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோட்டையில் தேசியக்கொடி தான் பறக்கும். அந்தந்த கட்சித்தலைவர்கள் அவரவர் கொடிகளை தூக்கிப்பிடிக்கலாம்’’ என்றார்.Tags : Udayakumar ,fort , The national flag will fly at the fort: Minister Udayakumar retaliates
× RELATED பருவமழையை எதிர்க்கொள்ள அனைத்து...