×

வாகனம் மோதி விவசாயி பலி

பள்ளிப்பட்டு:  ஆர்.கே.பேட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். ஆர்.கே. பேட்டை அடுத்த புதூர்மேடு கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (40). விவசாயி. நேற்று முன்தினம் இரவு சித்தூர் - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலை புதூர்மேடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே துடித்துடித்து ரத்தவெள்ளத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, தகவலின்பேரில் ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Vehicle collision , Vehicle collision kills farmer
× RELATED மானாமதுரை அருகே வாகனம் மோதி முதியவர் பலி