×

கீவளூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட பூமி பூஜை

ஸ்ரீபெரும்புதூர்:  ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் கீவளூர் ஊராட்சியில், ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிடம் பாழடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, புதிய கட்டிடம் கட்ட தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஸ்ரீ18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைதொடர்ந்து நேற்று, ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை நடந்தது. ஸ்ரீபெரும்புதூர் எம்எம்ஏ பழனி கலந்து கொண்டு பணியை துவக்கி வைத்தார்.

ஸ்ரீபெரும்புதூர் நகர கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் போந்தூர் செந்தில்ராஜன், மாத்தூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி தலைவர் எறையூர் முனுசாமி, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சிவக்குமார், கீவளூர் முன்னாள் ஊராட்சி தலைவர் கோவிந்தராஜ், அதிமுக நிர்வாகி கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Bhoomi Puja ,Panchayat Council Office ,Keevalur Panchayat , Bhoomi Puja to build Panchayat Council Office in Keevalur Panchayat
× RELATED ஆளுநரின் கடிதத்தில் பெரிய...