×

தட்டார்மடம் செல்வன் சகோதரர்களுக்கு முன்ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!!!

மதுரை: நிலத்தகராறு காரணமாக கடத்தி கொலை செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் செலவன் சகோதரர்களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முன்ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி அருகே உள்ள சொக்கன்குடியிருப்பை சேர்ந்தவர் எலிசபெத். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் திருமணவேல் என்பவருக்கும் நில பிரச்சனை தொடர்பாக கடந்த ஒன்றரை வருடமாக முன் விரோதம் இருந்துள்ளது. இதையடுத்து திருமணவேல் மற்றும் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் ஆகிய இருவரும் இணைந்து எலிசபெத்தின் மகன்களான செல்வன், பங்காருராஜன், பீட்டர் ஆகிய 3 பேர் மீது கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 3 முறை பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதாவது கொலை முயற்சி செய்தல், அவதூறாக பேசுதல், நிலத்திற்குள் அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட பல்வேறு புகார்களை தொடுத்துள்ளார். இந்த வழக்கில்தான் தற்போது செல்வன் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில், அதில் முக்கிய பங்கு வகித்த காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் திருமணவேல் என்பவரும் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், செல்வனின் சகோதரர்கள் தங்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கில் முன்ஜாமின் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அதில், திருமணவேல் என்பவருக்கு ஆதரவாக செயல்பட்டு தங்கள் மீது பொய் வழக்கை தட்டார் மடம் காவல் ஆய்வாளர் பதிவு செய்துள்ளார். எனவே இந்த வழக்கில் எங்களை கைது செய்யாமல் இருப்பதற்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் மற்றும் எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.  இந்த மனுவானது உயர்நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, செல்வன் இறந்து விட்டதால் மற்ற இருவருக்கும் எந்த வித நிபந்தனையும் இன்றி முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

Tags : branch ,Madurai ,brothers ,High Court ,Selvan , Madurai branch of the High Court orders granting bail to the Thattarmadam Selvan brothers
× RELATED வைகை, காவேரி, குண்டாறு இணைப்பு தமிழக...