×

2021ம் ஆண்டு ஏப்ரலில் அமெரிக்கர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி மருந்து கிடைத்துவிடும் : அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்

வாஷிங்டன்:2021ம் ஆண்டு ஏப்ரலில் அமெரிக்கர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி மருந்து கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கிறேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.கொரோனா வைரஸ் தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் களமிறங்கி உள்ளன. ரஷ்யா, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன. குறிப்பாக, அமெரிக்கா கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வாஷிங்டனில் நிருபர்கள் சந்திப்பின் போது, ‘நாம் குறுகிய காலத்திலேயே தகுந்த தடுப்பு மருந்தினை தயாரிப்போம். நாம் கொரோனாவை வென்று விடுவோம். அக்டோபர் மாதத்தில் கொரோனா தடுப்பூசி மருந்திற்கான அனுமதி கிடைத்து விடும். தேசிய மருந்துக் கட்டுப்பாட்டாளர்கள் அங்கீகரித்த 24 மணி நேரத்திலேயே கொரோனா தடுப்பு மருந்துகளின் விநியோகம் தொடங்கி விடும். ஒவ்வொரு மாதத்திற்கும் லட்சக்கணக்கான கொரோனா தடுப்பூசி மருந்துகள் கிடைக்க ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கிறேன். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் அமெரிக்கர்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கிறேன்’ என்றார்.

Tags : Corona ,President ,Americans ,Trump , Americans, Corona, Vaccine, President Trump
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...