×

கொடைக்கானல் கீழ்மலையில் பயிர்களை நாசம் செய்த காட்டு யானைகள்: விவசாயிகள் கவலை

கொடைக்கானல்: கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் விளைநிலங்களில் புகுந்து காட்டுயானைகள் பயிர்களை துவம்சம் செய்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளாக பாரதி அண்ணாநகர், புலியூர், பேத்துப்பாறை, கேசி.பட்டி, பாச்சலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் அமைந்துள்ளன. இங்கு வசிக்கும் மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாகும். இங்கு அவரை, பலா, வாழை, காப்பி உள்ளிட்ட பல்வேறு விளைபயிர்கள் விவசாயம் செய்யப்படுகிறது.

இந்த விவசாய நிலப்பகுதிகளில் விளைவிக்கப்பட்டுள்ள பயிர்களை யானைகள் உட்புகுந்து சேதப்படுத்தியும், விவசாயிகளை அச்சுறுத்தியும் வருகின்றன. விளைநிலங்களுக்குள் யானை வராமல் அமைக்கப்படும் அனைத்து விதமான தடுப்பு வேலிகளையும் யானைக் கூட்டங்கள் சேதப்படுத்தி வருகின்றன.

மேலும் இரவு, பகல் நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் கூட்டங்களாக வந்து அச்சுறுத்தி வருவதால் பொதுமக்கள் உயிர் பயத்தில் இருந்து வருகின்றனர். இதனை விரட்ட வனத்துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, யானை கூட்டங்களை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டுமென பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : foothills ,Kodaikanal , Elephants, farmers, concern
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்