×

காணொலியில் கொரோனா சிகிச்சை மாநாடு: முதல்வர், வெளிநாட்டு மருத்துவர்கள் பங்கேற்பு

புதுச்சேரி: கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை தொடர்பாக காணொலி வழியாக மாநாடு நேற்று நடந்தது. தெலங்கானா காங்கிரஸ் பொருளாளரும், அம்மாநில பிளாஸ்மா நன்கொடையாளர்கள் சங்க தலைவருமான குடூர் நாராயண ரெட்டி ஏற்பாட்டில் நடைபெற்ற இம்மாநாட்டில் முதல்வர் நாராயணசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து டாக்டர்கள் அன்னே சுரேஷ், பிரபாகர் ரெட்டி, மடிபதி ராஜேஷ், லோகேஷ் எடாரா ஆகியோர் பங்கேற்று புதுச்சேரியில் உள்ள கோவிட்-19 நிலையை ஆய்வு ெசய்தனர். மாநாட்டில் புதுச்சேரியில் இருந்து நிவாரணம் மற்றும் மறுவாழ்வு ஆணையர் அன்பரசு, முதல்வரின் செயலர் விக்ராந்த் ராஜா, சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார், இந்தியவழி முறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநர் ஸ்ரீராமலு மற்றும் குழுவினர் பங்கேற்றனர்.

Tags : Corona ,treatment conference ,physicians , Corona, treatment
× RELATED முதல்வர் பங்கேற்க இருந்த கொரோனா ஆய்வு கூட்டங்கள் ஒத்திவைப்பு