×

சின்ன வீராம்பட்டினம் கடற்கரையில் சோலார் பேனல் பொருத்தும் பணி

புதுச்சேரி: புதுச்சேரியை அடுத்த சின்னவீராம்பட்டினத்தில் மணல் பரப்புடன் கூடிய அழகிய கடற்கரை அமைந்துள்ளது. சர்வதேச அளவில் 2வது அழகிய கடற்கரை என தேர்வு செய்யப்பட்ட இந்த கடற்கரைக்கு நீல கொடி கடற்கரை என பெயரிடப்பட்டுள்ளது.

இதனால் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மத்திய, மாநில அரசுகளின் நிதியில் இருந்து சுற்றுலாத்துறை சார்பில் பலகோடி மதிப்பில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா ஊரடங்கு தளர்வுக்குபின் இப்பணிகள் அனைத்தும் அங்கு விறுவிறுப்பை எட்டியுள்ளன.

சுற்றுலா பயணிகள் இளைப்பாற கடற்கரை பகுதியில் நிழற்குடில்கள், சிறுவர்களுக்கான விளையாட்டு சாதனங்கள், கண்காணிப்பு கோபுரம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இதில் மின் விளக்குகள், அலுவலக மின் சாதனங்களை இயக்குவதற்கு தேவையான மின்சாரத்தை சூரிய ஒளியில் இருந்து உற்பத்தி செய்யும் வகையில் அங்கேயே சூரிய மின்சக்தி தகடுகள் (ேசாலார் பேனல்) அமைக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

மேலும் அப்பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. திறந்தவெளி உடற்பயிற்சி கருவிகள், கழிவுநீர் சுத்திகரிப்பு, குப்பைகளை தரம்பிரித்து உரம் தயாரித்தல், செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுதல் உள்ளிட்ட பணிகளும் நடக்கிறது. உள்ளூர்வாசிகளை கவர்ந்துள்ள, சர்வதேச தரத்தில் உருவாக்கப்படும் இந்த கடற்கரை எப்போது முழுமையாக திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் அனைவரிடமும் எழுந்துள்ளது.

Tags : beach ,Chinna Veerampattinam , Chinna Veerampattinam, Beach, Solar Panel
× RELATED அறந்தாங்கி கடலோரத்தில் கனமழை