×

கல்லூரி மாணவி தூக்கில் தற்கொலை: போலீசார் விசாரணை

கூடலூர்: கூடலூரை அடுத்துள்ள தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது பாடந்துரை கிராமம். இங்கு வசிப்பவர் சஜீவன். வெளிநாட்டில் பணிபுரிகிறார். இவரது மகள் சரண்யா (20). அரசுக்கல்லூரியில் இளநிலை பட்டம் 2ம் ஆண்டு படித்து வந்தார். மாணவி சரண்யா தனது தாயார் மற்றும் சகோதரனுடன் வீட்டில் வசித்து வந்தார். சரண்யா வழக்கம்போல் வீட்டில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தூங்கச்சென்றார். மறுநாள் காலையில் வெகு நேரமாகியும் எழுந்திருக்கவில்லை. சந்தேகத்தின் பேரில் கதவை தட்டியபோதும் திறக்கவில்லை. கதவை உடைத்து பார்த்தபோது அவர் தூக்கில் பிணமாக தொங்கினார்.

சம்பவம் குறித்து தேவர்சோலை போலீசார் வழக்குப்பதிந்து, மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மாணவி தற்கொலை செய்த அறையில் சோதனை செய்தபோது சுவற்றில் ஆங்கிலத்தில் ’சாரி டு ஆல்’ என எழுதி இருந்தது. அவரது ஸ்மார்ட் போன் திறக்க முடியாத நிலையில் சங்தேக எண்கள் கொண்டு லாக் செய்யப்பட்டிருந்தது. போலீசார் அதனை சைபர் கிரைம் பிரிவுக்கு அனுப்பி வைத்தனர். போனில் உள்ள தகவல்களை கொண்டு இறப்புக்கான காரணம் என்ன? என்பதை கண்டறிய போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

Tags : College student ,suicide ,Police investigation , College student, suicide
× RELATED ஆன்லைன் வகுப்பில் கவனம் செலுத்த முடியாததால் கல்லூரி மாணவர் தற்கொலை