×

குத்தகைகரை கிராமத்தில் மயான பாதை அமைக்கப்படுமா? கிராம மக்கள் எதிர்பார்ப்பு

கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே இதுவரை மயானத்திற்கு பாதை அமைக்கப்படாத குத்தகை கரை கிராமத்திற்கு பாதை அமைக்கப்படுமா என்பது குறித்து கிராம மக்கள் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே குத்தகைகரை கிராமம் உள்ளது. இக்கிராமத்திற்கு கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலையை கடந்து மயானத்திற்கு செல்ல இதுவரை சாலை அமைக்கப்படவில்லை. சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இங்குள்ள மயானத்திற்கு பாதை அமைக்கப்படாததால் குத்தகைகரை, சாமியம், மேல வல்லம் ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்களுக்கும் இங்குள்ள மயானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இக்கிராமங்களை சேர்ந்தவர்கள் இறந்தவர்களின் உடல்களை மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை சுமந்து சென்று கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலையில் இருந்து சடலத்தை சிரமத்துடன் இறக்கி பின்னர் மயானத்திற்கு சுமந்து சென்று அடக்கம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.

ஆற்றங்கரை சாலையிலிருந்து 50 மீட்டர் தொலைவுக்கு சாலையே இல்லாமல் முட்புதர்கள் நிறைந்த இடமாக உள்ளதால் இறந்தவரின் உடலை,அந்த நாள் மட்டுமே பாதையை சரிசெய்து பிணத்தை சுமந்து சென்று அடக்கம் செய்து வருகின்றனர்.
குத்தகைகரை மயானத்திற்கு செல்ல சாலை அமைக்க கோரி கிராம மக்கள் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் ஒன்றிய குழு உறுப்பினராகவும், ஒன்றியக்குழு துணைத் தலைவரான பானுசேகர், கடந்த சில தினங்களுக்கு முன்பு சாலை அமைக்கும் பணியை துவக்க முயற்சித்தபோது மயானம் தற்போது இருக்கும் இடம் வனத்துறைக்கு சொந்தமான இடம் என்று கூறி வனத்துறையினர் சாலை அமைக்க அனுமதி மறுத்தனர். இதுகுறித்து ஒன்றியக்குழு துணை தலைவர் பானுசேகர் கூறுகையில் குத்தகை கரை கிராமத்தில் உள்ள மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லை. ஆனால் வனத்துறை அனுமதி மறுத்ததால் சாலைப் பணியை துவக்க முடியவில்லை. நிச்சயமாக மாவட்ட கலெக்டர் மூலம் சிறப்பு அனுமதி பெற்று விரைவில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags : graveyard ,village , Kollidam, the grave path
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...