×

சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பில்லை.: ஆர்.டி.ஐ. கேள்விக்கு கர்நாடக சிறைத்துறை பதில்

பெங்களூரு: சொத்துகுவிப்பு வாழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பில்லை என்று  கர்நாடக சிறைத்துறை நிறுவகம் தெரிவித்துள்ளது. 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலா பெங்களுருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறைத்துறை விடுமுறை விதிகளின் அடிப்படையில் இந்த மாதம் இறுதியில் சசிகலா விடுதலை ஆவர் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த ஆர்.டி.ஐ. ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி கைதிகளுக்கு வழங்கக்கூடிய விடுமுறைகள் குறித்தும், இதுபோன்ற கைதிகளுக்கு விடுமுறை பொருந்தும் என்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரம் கோரி விண்ணப்பித்திருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள கர்நாடக சிறைத்துறை. வாழ்நாள் சிறை தண்டனை பெற்றுள்ள கைதிகளுக்கு மட்டுமே விடுமுறை நாட்கள் பொருந்தும் என்று தெரிவித்துள்ளது.

சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, பெங்களுரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து 2021-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக ஆர்.டி.ஐ.மூலம் ஏற்கனவே பதில் தரப்பட்டு இருந்தது. இந்தநிலையில் தற்போது மற்றோரு ஆர்.டி.ஐ. தகவல்கள் மூலம் சசிகலா ஜனவரிக்கு முன்பாகவே விடுதலையாக வாய்ப்பு இல்லை என்று திட்டவட்டமாக தெரியவந்துள்ளது.


Tags : Sasikala ,RTI Karnataka Prisons Department , Sasikala not likely to be released early: RTI Karnataka Prisons Department answer to the question
× RELATED சசிகலா காலில் விழுந்துதான் அனைவரும்...