கிராமப்புறங்களை போல நகர்ப்புறங்களிலும் 100 நாள் வேலைத் திட்டத்தை செயல்படுத்தலாம் : ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் பரிந்துரை!!

சென்னை: நகர்ப்புறங்களிலும் கிராமங்களில் செயல்படுத்தப்படும் 100 நாள் வேலைத் திட்டம் போல ஒரு வேலைவாய்ப்பு திட்டத்தை செயல்படுத்தலாம் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கக் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் தமிழகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்பைச் சீரமைக்க ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் முன்னாள் தலைவரான சி.ரங்கராஜன் தலைமையில், 24 பேர் கொண்ட பொருளாதார வல்லுநர்கள், பல்துறை நிபுணர்கள், உயர் அதிகாரிகள் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.இந்தக் குழுவினர் தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆய்வு செய்து அந்த அறிக்கையை முதல்வர் பழனிசாமியிடம் தாக்கல் செய்துள்ளது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசியா அவர், பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்பது குறித்தது பரிந்துரை முதல்வரிடம் தாக்கல் செய்யப்பட்டது. 2020-21 இல் பொருளாதார வளர்ச்சி 1.71% ஆக இருக்கும் எனவும் சரிவு ஏற்படலாம் எனவும் கணித்துள்ளோம் . தமிழகத்தில் 2 மாதங்களில் பொருளாதார நிலை  கொரோனாவுக்கு  முந்தைய   நிலைக்குச் செல்ல வாய்ப்பு உள்ளது. தமிழக அரசிடம் பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து 2 பிரிவுகளாக பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.முதல் பிரிவில் உடனடி நிவாரணம், புதுப்பித்தல் தொடர்பான பரிந்துரைகளை அளித்துள்ளேன்.

நவம்பர் வரை இலவச அரிசி திட்டத்தை மேலும் நீட்டிக்க பரிந்துரைத்துள்ளோம். தமிழ்நாட்டில் மின்னுற்பத்தி நுகர்வு கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு சென்றுக் கொண்டிருக்கிறது.தமிழகத்தில் சிறு தொழில்களுக்கு கடன் உத்தரவாத திட்டத்தை கொண்டு வர வேண்டும்.இப்போதைக்கு வரிவிகிதங்களை உயர்த்த வாய்ப்பு இல்லை. கிராமப்புற ஊரக வேலைத்திட்டம் போல் நகரப்புறத்திலும் கொண்டுவர வேண்டும். சுகாதாரத்துறை மற்றும் காவல் துறைக்கு மேலும் 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்க வேண்டியிருக்கும். பொருளாதாரம் மந்தமாக உள்ள நிலையில், அரசு தான் செலவு செய்ய முடியும்.தமிழ்நாட்டு முதலீட்டு நிறுவனத்தின் மூலத்தினத்தை ரூ.1,000 கோடி அதிகரிக்க பரிந்துரைத்துள்ளோம்., என்றும் அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.

Related Stories:

>