×

தூத்துக்குடியில் காரில் கடத்தி இளைஞர் கொலை..!! - குற்றவாளிகளை கைது செய்யக்கோரி தி.மு.க., எம்.எல்.ஏ-க்கள் 300 பேர் தர்ணா போராட்டம்!!!

தூத்துக்குடி:  தூத்துக்குடியில் இளைஞர் காரில் கடத்தி சென்று கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி திருச்செந்தூர் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தட்டார்மடன் அருகே உள்ள சொக்கன் குடியிருப்பு பகுதியை சேர்ந்த எலிசபெத் என்பவரின் மகன் செல்வம். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மகராஜன் என்பவரின் மகன் திருமணவேல் என்பவருக்கும் கடந்த சில வருடங்களாக நிலத்தகராறு தொடர்பாக முன் விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில், உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பிய செல்வனை கடந்த 18ம் தேதி சிலர் காரில் கடத்தி சென்று கொலை செய்துவிட்டனர். இக்கொலை தொடர்பாக அதிமுக உறுப்பினர் திருமணவேல் உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொல்லப்பட்ட செல்வனின் குடும்பத்தினருக்கு திருச்செந்தூர் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அவர் 300க்கும் மேற்பட்டோருடன் இணைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து குற்றவாளிகளை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றும் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அவருடன் செல்வனின் உறவினர்கள் மற்றும் தி.மு.க., தொண்டர்கள் 300க்கும் மேற்பட்டோர் இணைந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

Tags : Thoothukudi ,DMK ,arrest , Thoothukudi, Youth, Murder., Criminals, Arrest, DMK, MLAs
× RELATED அண்ணா பல்கலை. துணைவேந்தரை கண்டித்து...