×

மத்திய அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது

சென்னை: மத்திய அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பாரி முனையில் இருந்து கோட்டை நோக்கி சென்ற விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள் மூன்றையும் திரும்பப்பெற விவசாயிகள் வலியுறுத்துகின்றன. விவசாயிகளுக்கு துரோகம் இழைத்த எடப்பாடி பழனிசாமி பதவி விலக வலியுறுத்தியும் முழக்கமிட்டனர்.


Tags : Farmers arrested for road blockade against federal agriculture law
× RELATED விவசாயிகளுடன் ஆலோசிக்காமல்...