இந்தியா- இலங்கை இடையே மெய்நிகர் உச்சிமாநாடு.: 26-ம் தேதி பிரதமர் மோடி, ராஜாபக்சே பங்கேற்பு

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை பிரதமர் மகிந்த ராஜாபக்சே இடையான மெய்நிகர் உச்சிமாநாடு வருகிற 26-ம் தேதி நடைபெறுகிறது. இலங்கை பிரதமர்மகிந்த ராஜாபக்சே உடனான மெய்நிகர் உச்சிமாநாட்டில் இரு நாடுகளுக்கான நீண்டகாலம் மற்றும் பண்தன்மையிலான உறவுகளை வலுப்படுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி பேச்சு நடத்துகிறார்.

இரு தரப்பு ஒத்துழைப்பை அனைத்து தளங்களிலும் விரைவு படுத்த வேண்டிய முக்கியத்துவம் குறித்து இருவரும்  விவாதிக்கையுள்ளனர். கொரோனா பெரும் தொற்றால் ஏற்பட்டுள்ள சவால்களை தீர்ப்பதற்கு இந்தியாவும் இலங்கையும் நெருங்கிய நட்புறவில் இருக்க வேண்டிய அவசியம் குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

ஐநா பொது கவுன்சில் கூட்டத்தில் இந்த ஆண்டு காணொலி வாயிலாக பிரதமர் நிகழ்த்தவிர்க்கும் உரைக்கு இது முன்னோட்டமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Related Stories:

>