×

ரவுடிகளை கைது செய்ய வேண்டிய காவல்துறையே ரவுடிகளின் கூடாரமாகி விட்டதோ என்ற ஐயம் எழுகிறது : திமுக எம்.பி. கனிமொழி தாக்கு

தூத்துக்குடி இளைஞர் செல்வன் கொலையில் உடந்தையாக இருந்ததாக காவல் ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை கைது செய்யாததை கனிமொழி எம்.பி கண்டித்திருக்கிறார். தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செல்வன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனுக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.இதனையடுத்து தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், மீது (107, 336, 302, 364 ) கொலை வழக்கு உட்பட 4 பிரிவுகளில் நெல்லை மாவட்டம் திசையன்விளை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடி மக்களவை எம்.பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டத்தை சேர்ந்த, செல்வன் என்பவர் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் இன்னமும் கைது செய்யப்படவில்லை. ரவுடிகளை கைது செய்ய வேண்டிய காவல்துறையே ரவுடிகளின் கூடாரமாகி விட்டதோ என்ற ஐயம் எழுகிறது. உள்துறைக்கு பொறுப்பான முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கிறதா இல்லையா ?, என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

Tags : attack , Rowdies, Arrests, Police, DMK MP Kanimozhi, attack
× RELATED பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கொரோனா...