ஒரே மாதத்தில் மீண்டும் 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை.: அணையின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

சத்தியமங்கலம்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையில் காரணமாக பவானி சாகர் அணையின் நீர்மட்டம் ஒரே மாதத்தில் இரண்டாடுவது 100 அடியை எட்டியுள்ளது. காலை நிலவரப்படி பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து 11,661 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 100.70 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 29.2 டிஎம்சியாக உள்ளது. மேலும் குடிநீருக்காகவும், பாசனத்திற்காகவும் சேர்த்து பவானி சாகர் அணையில் இருந்து 3,050 கன அடி வெளியேற்றப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானி சாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 2,47,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் விவசாயிகளின் கோரிக்கையை கீழ் பவானி கால்வாய் பாசனத்திற்கு 2,300 கன அடி திறக்கப்பட்டுள்ளது. இதனால் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில், தற்போது நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் மீண்டும் 100 அடியை தாண்டியுள்ளது.

Related Stories:

>